tamilnadu

img

ஆந்திரமுதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரப்பிரதேச முதல்வராக ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்றுக்கொண்டார். 
ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடந்து முடிந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதியில் 151 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். விஜயவாடாவில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து வரும் ஜூன் 6ம் தேதி பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.